மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் படுகாயம்- டிரான்ஸ்பார்மில் பழுது பார்த்த போது விபரீதம்
பொன்னேரி அருகே டிரான்ஸ்பார்மில் பழுது பார்த்த போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் படுகாயமடைந்தார்.
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 50). இவர் மெதுர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக துணைமின் நிலையத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கஞ்சிவாயல் கிராமத்திற்கு செல்லும் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிப்பார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இதுகுறித்து திடுப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.