அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ பதிவேடுகள் கணினி மயம்

அரசு ஆஸ்பத்திரியின் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Update: 2022-03-09 12:31 GMT
புதுச்சேரி, மார்ச்.9-
அரசு ஆஸ்பத்திரியின் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கணினிமயம்
இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ பதிவேடுகள் குவிந்து கிடக்கின்றன. அவை அனைத்தையும் பாதுகாப்பதில் சிரமங்கள் எழுந்துள்ளன. இதனால் அந்த ஆவணங்களை கணினி மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதால் அனைத்து வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், மருத்துவ சட்ட வழக்குகள் பற்றிய அனைத்து பதிவுகளும் இதன்மூலம் பாதுகாக்கப்படும். இந்த பணியை சென்னையை சேர்ந்த சாராடெக் நிறுவனம் செய்ய உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் அரசு சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், சாராடெக் நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்