மும்பை மாநகராட்சி தேர்தல் தள்ளி போகிறது- நிர்வாக அதிகாரி நியமனம்

மும்பை மாநகராட்சி பதவி காலம் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாததால் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.;

Update: 2022-03-09 12:29 GMT
படம்
மும்பை,

மும்பை மாநகராட்சி பதவி காலம் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாததால் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
 பதவி காலம் நிறைவு

மும்பை மாநகராட்சியின்  5 ஆண்டு பதவி காலம் கடந்த 7-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனால் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட  227 கவுன்சிலர்கள் இனி செயல்பட முடியாது. தேர்தல் நடத்தவும் தாமதமாகும் என்று தெரிகிறது. 

இதனால் மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை மாநில அரசு நியமித்து உள்ளது. அதன்படி தற்போது மாநகராட்சி கமிஷனராக உள்ள இக்பால் சகால் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 

ஆலோசனை 

இதையடுத்து அவர் கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் சிறப்பு கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள தேவையான பணிகளை குறித்த நேரத்தில் மேற்கொள்ளுமாறு பல்வேறு துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். வருகிற மே மாதம் 15-ந் தேதிக்குள் அனைத்து சாலை பணிகளை முடிக்கவும், பருவமழையின் போது தடை செய்யப்படும் மின்சார வினியோகம் குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பெஸ்ட் கழகத்திற்கு அறிவுறுத்தினார். 

இதைத்தவிர பருவமழையின் போது நீர்நிலைகளுக்கிடையே நடந்து வரும் மெட்ரோ பணிகளை எம்.எம்.ஆர்.டி.ஏ. வுடன் ஒருங்கிணைக்குமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி உள்ளிட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்