திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் தினவிழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது

Update: 2022-03-09 11:46 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், “இந்த ஆண்டிற்கான மகளிர் தினவிழா ஆய்வு பொருளான “நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம் பற்றி எடுத்துரைத்தார். மேலும் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் போன்ற அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார், ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெபராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் முன்னேற்றம் நாட்டிற்கு அவசியம் என்பதையும், பெண்களுக்காக நம் நாட்டில் உள்ள பாதுகாப்பு சட்டங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் மகளிர் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த ஜோதி வரவேற்றார். விழாவில் அனைத்து துறை பேராசிரியைகளும், முதுநிலை மாணவிகளும் கலந்துகொண்டனர். இறுதியாக விலங்கியல் துறை பேராசிரியை வசுமதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்