ஏ.டி.எம். எந்திரத்தின் கண்ணாடி உடைப்பு

மேச்சேரி அருகே ஏ.டிஎ.ம். எந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Update: 2022-03-09 03:22 GMT
மேச்சேரி:-
மேச்சேரி அருகே வெள்ளார் ஊராட்சி காளிக்கவுண்டனூர் பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கியும், அதன் அருகிலேயே வங்கியின் ஏ.டி.எம். மையமும் உள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுக்க கார்டை போட்டு விட்டு, திடீரென்று எந்திர டிஸ்பிளே கண்ணாடியை உடைத்தார். சத்தம் கேட்டு வங்கியில் இருந்து வங்கி மேலாளர் ஓடி வந்தார். உடனே 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். தப்பியவர்கள் 2 பேருக்கும் 30 வயது இருக்கும். இது குறித்து மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தின் கண்ணாடியை உடைத்த நபர் குடிபோதையில் உடைத்தாரா? அல்லது பணத்தை திருட உடைத்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்