சிலம்பாட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து
தேசிய சிலம்பாட்ட போட்டியில் சேலம் மாணவர்கள் வெற்றி பெற்று சான்றிதழ்கள், கோப்பைகளை பரிசாக பெற்றனர்.;
சேலம்:-
சேலத்தை சேர்ந்த மாணவர்கள் 18-வது சிலம்பம் போட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 நாட்கள் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பம் அடிமுறை அசோசியேசன் மாணவர்கள் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த மாணவர்கள், மத்திய மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் கலையமுதன், சேலம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ராஜ்குமார், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் நட்ராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.