மேலும் 2 பேர் போலீசில் சரண்
தலைவாசல் அருகே ஓய்வு பெற்ற பெண் சத்துணவு ஊழியரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே ஓய்வு பெற்ற பெண் சத்துணவு ஊழியரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்
தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம். அதே ஊரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 49). விவசாயி. இவருடைய அக்காள் பூவாயி (66). ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். இந்த நிலையில் வெங்கடாசலத்துக்கும், ராமசாமிக்கும் இடையே நிலத்தகராறு இருந்த வந்தது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் ராமசாமி வீட்டுக்கு சென்று அவரது அக்காள் பூவாயியை அடித்துக்கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
2 பேர் போலீசில் சரண்
இது குறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் (54), தென்குமரையை சேர்ந்த மணி (55) உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இதனிடையே சாத்தப்பாடியை சேர்ந்த ராமர் (67), பெரியசாமி (58) ஆகிய 2 பேர் தலைவாசல் போலீசில் சரண் அடைந்தனர். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலத்தை தலைவாசல் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.