பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் ஆலை தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன், மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் பால் நேரு உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், சுவாமிதாஸ், பாக்கியராஜ், கருத்தபாண்டியன், சந்திரசேகர், சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி, ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், திருவேங்கடம் நகர செயலாளர் மாரிக்கனி மற்றும் தனியார் ஆலை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.