ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1,060 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 646 ஆக உயர்ந்தது.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 855 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 14 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 734 பேர் பலியாகி உள்ளனர்.