பூட்டிய வீட்டில் நகை, செல்போனை திருடியவர் கைது
மதுரையில் பூட்டிய வீட்டில் நகை, செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை,
மதுரை மகாத்மா காந்திநகர், மகாநதி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 47). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 6 கிராம் நகை, வெள்ளி பொருட்கள், செல்போன், கைக்கடிகாரம் போன்ற பொருட்களை திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் முடக்கத்தான் பகுதியை சேர்ந்த முத்து (44) என்பவர் திருடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த பொருட்களை கைப்பற்றினர்.