காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் மைனர்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சீனிவாசப்பூரில் நடந்துள்ளது

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் மைனர்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சீனிவாசப்பூரில் நடந்துள்ளது

Update: 2022-03-08 21:48 GMT
கோலார் தங்கவயல்:
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் மைனர்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சீனிவாசப்பூரில் நடந்துள்ளது. 
அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

காதலுக்கு எதிர்ப்பு

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா யலவனஹள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (வயது 27). இவரும் அந்தப்பகுதியை சேர்ந்த மைனர்ெபண்ணும் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம், இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனாலும் அவர்கள் தங்கள் காதலை கைவிடவில்லை. இந்த நிலையில், சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், ஒன்றாக தற்கொலை செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்தனர். 

தற்கொலை

அதன்படி, கங்காதரும், மைனர்ெபண்ணும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். பின்னர், அவர்கள் யலவனஹள்ளி வெளிப்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சீனிவாசப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்