ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

மதுரை அண்ணாநகரில் உள்ள ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.;

Update: 2022-03-08 21:29 GMT
மதுரை,

மதுரை அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் ரோட்டில் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்ம ஆசாமி ஒருவர் அங்கு சென்றார்.அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. எனவே அவர் திரும்பி சென்று விட்டார். இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து வங்கிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து ஏ.டி.எம். பிரிவு மேலாளர் பரசுராம்பட்டி, கங்காநகரை சேர்ந்த சம்சுதீன் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள

மேலும் செய்திகள்