லாரி மோதி தொழிலாளி சாவு
நெல்லையில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
களக்காடு அருகே உள்ள கீழபத்தை பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நெல்லை பேட்டை ரெயில்வே கேட் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மகாராஜன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.