பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த 3 பேர் சிக்கினர்

பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த 3 பேர் சிக்கினர்

Update: 2022-03-08 21:25 GMT
பெங்களூரு:

பெங்களூரு ஞானபாரதி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் கடந்த மாதம்(பிப்ரவரி) 28-ந் தேதி கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் ஞானபாரதி, கெங்கேரி பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தங்கச்சங்கிலியை பறித்து வந்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்