கிராம நிர்வாக அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

களரப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-08 21:16 GMT
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கண்ணப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமோகன்(வயது 52). இவர், பெரம்பலூர் பகுதிக்கு உட்பட்ட களரம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதனால், மனவேதனையில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
 இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்