ஆரல்வாய்மொழி,
மாதவலாயம் அருகே உள்ள சோழபுரத்தில் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. நேற்று காலையில் கோவிலுக்கு ெசன்றவர்கள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது யாரோ மர்ம நபர் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து கோவில் அருகில் உள்ள ஒரு தோப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது. அவர்தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.