மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-08 21:03 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில், சிவந்திப்பட்டி சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த ஜேக்கப் என்ற கருப்பு ஜாகுவார் (வயது 30) என்பதும், அவர் விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஜேக்கப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்