ஆட்டோவுக்கு வழிவிடுவதில் மோதல்- 5 பேர் மீது வழக்கு

சரக்கு ஆட்டோவுக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-03-08 20:51 GMT
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி காலனி தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (வயது 47). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டை சாலையில் நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கபில்தேவ்(32) சரக்கு ஆட்டோவில் வாடகை பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சரக்கு ஆட்டோ செல்ல வழி இல்லாததால் இதுதொடர்பாக சுப்பிரமணி, கபில்தேவ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கபில்தேவுக்கு ஆதரவாக சக்கரவர்த்தி(35), பாலகிருஷ்ணன் (19), ஜெயகாந்தன்(45) ஆகியோர்  சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கபில்தேவ், சக்கரவர்த்தி, பாலகிருஷ்ணன், ஜெயகாந்தன் ஆகிய 4 பேர் மீதும், கபில்தேவ் கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியன் மீதும் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்