மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சையில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
தஞ்சை வடக்கு ஆஜாரம் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 70). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.வடக்கு ஆஜாரம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மஞ்சுளா கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இது குறித்து மஞ்சுளா தஞ்சை நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.