கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3 வது அலை முடிவுக்கு வந்தது

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3 வது அலை முடிவுக்கு வந்தது;

Update: 2022-03-08 20:27 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 74 ஆயிரத்து 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 73 ஆயிரத்து 305 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 893 பேர் பலியாகி உள்ளனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லை. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கை எண்ணிக்கையில் பாதிப்பு இருந்த நிலையில், நேற்று யாருக்கும் பாதிப்பு இல்லை. இதன் மூலம் மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்னர். ஆனால் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்தரிகளில் 32 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இருப்பினும் முக கவசம் அணிதல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்