பிளஸ்-1 மாணவியை கடத்தி உல்லாசம்
சேத்தியாத்தோப்பு அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சந்தோஷ், கடந்த டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை சேலத்துக்கு கடத்திச்சென்றார். அங்கு வாடகை வீட்டில் தங்கி சந்தோஷ், மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். மேலும் அந்த மாணவி மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.