லால்குடி புஞ்சை சங்கேந்தி நடுத்தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் தினேஷ் (32). இவருடைய மனைவி ரஞ்சினி (23). தினேஷ் சம்பவத்தன்று லால்குடி பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிந்தார். கல்லக்குடி அருகே சிதம்பரம்-திருச்சி நெடுஞ்சாலையில் கூடலூர் பிரிவு சாலை பகுதியில் வந்தபோது, சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்திருச்சிஅரசுஆஸ்பத்திரிக்குஅனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.