உக்ரைனில் இருந்து நவீனின் உடல் கொண்டுவரப்படும்-முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

உக்ரைனில் இருந்து நவீனின் உடல் கொண்டுவரப்பட உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

Update: 2022-03-08 20:12 GMT
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் பலியான மாணவர் நவீனின் உடல் பதப்படுத்தப்பட்டு சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கர்நாடகம் கொண்டுவருவது குறித்து வெளியுறவுத்துறை மந்திரியிடம் நான் பேசினேன். நவீனின் உடலை கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.

அங்கு வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டதும், நவீனின் உடல் கர்நாடகத்திற்கு கொண்டு வரப்படும். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்கிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்