மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் டிரைவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் டிரைவர் பலியானார்.
தா.பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (40). தனியார் ஆலையில் வாகன டிரைவராக வேலைபார்த்து வந்த இவர் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த அடியான் கருப்பு கோவில் அருகே சென்றபோது, எதிரே பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்த ராமராஜ் (42) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்ததில் சேகர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராமராஜ் (42) துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து சேகர் உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.