கல்லூரி மாணவர் பலி

கல்லூரி மாணவர் பலி

Update: 2022-03-08 19:56 GMT
கொள்ளிடம் டோல்கேட், மார்ச்.9-
வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
கல்லூரி மாணவர்
லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் நந்தகுமார் (வயது 19), இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்  இளங்கலை தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக நந்தகுமார் லால்குடியிலிருந்து நெ.1டோல்கேட்டிற்கு வந்து நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.  பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நந்தகுமார் பஸ்சின் முன்பக்க படியில் ஏறி உள்ளார். பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. அப்போது நிலைத்தடுமாறிய அவர் பஸ்சின் படியில் இருந்து கீழே விழுந்தார். இதில் நந்தகுமார் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்