வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த அயன்ஆத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவரது மனைவி சசிகலா (வயது 27). இந்த தம்பதிக்கு நந்தினி(9), தர்ஷினி(7), தர்ஷன் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது குழந்தைகளுடன் சசிகலா மாயமானதாக தெரிகிறது. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து கயர்லாபாத் போலீசில் முத்தமிழ்செல்வன் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குபதிந்து குழந்தைகளுடன் மாயமான சசிகலாவை தேடி வருகின்றனர்.