5 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் குறைந்த அளவே மீன்கள் பிடிபட்டதால் ஏமாற்றம்

5 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் குறைந்த அளவே மீன்கள் பிடிபட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.;

Update: 2022-03-08 19:45 GMT
அதிராம்பட்டினம்:-

5 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் குறைந்த அளவே மீன்கள் பிடிபட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

புயல் எச்சரிக்கை

புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

மீனவர்கள் ஏமாற்றம்

இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனால் அதிக அளவு மீன்கள் பிடிபடும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் நேற்று கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் மிகக்குறைந்த அளவே மீன்கள் பிடிபட்டன. இதன் காரணமாக மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

மேலும் செய்திகள்