கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

திருவட்டார் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-08 19:30 GMT
திருவட்டார்:
திருவட்டார் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார் அருகே உள்ள இரவிபுதூர்கடையைச் சேர்ந்தவர் முகமது நாசர் (வயது 63). இவருக்கு மனைவி, 4 மகள்களும் உள்ளனர். முகமது நாசர் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மகள்களை திருமணம் செய்து கொடுக்க முகமது நாசர் பலரிடம் கடன் வாங்கியதாகவும், பின்னர், அதை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது நாசர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகமது நாசர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரூகையா பீவி கொடு த்த புகாரின் பேரில் திருவட்டார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்