மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
ராமநத்தம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே அ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது65). இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் ராசு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக 243 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.