83 போலீசாருக்கு பணி நியமன ஆணை

குமரியில் 83 போலீசாருக்கு பணி நியமன ஆணையை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார்.

Update: 2022-03-08 19:20 GMT
நாகர்கோவில்:
குமரியில் 83 போலீசாருக்கு பணி நியமன ஆணையை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண் மற்றும் பெண் போலீசாருக்கான தேர்வு நடந்தது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 69 ஆண்கள், 14 பெண்கள் உள்பட 83 பேர் போலீசாராக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவ்வாறு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு புதிய போலீசாராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும், திறம்படவும் செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி வாழ்த்தும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்