உலக மகளிர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள்
உலக மகளிர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.;
தொண்டி
உலக மகளிர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மகளிர் தின விழா
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் நடைபெற்றது. சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் கோகிலா வரவேற்றார். விழாவில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர் அலுவலகப் பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு தாசில்தார் செந்தில்வேல் முருகன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் அமுதன், ராமமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நம்பு ராஜேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் சக்திவேல், கிராம உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, தென்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாயல்குடி தொன்போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் தொன்போஸ்கோ பெண்கள் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆரோக்கியம் தலைமை தாங்கினார். திருச்சி காவேரி பெண்கள் கூட்டமைப்பு இயக்குனர் அமல் முன்னிலை வகித்தார். சாயல்குடி பஸ் நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை சாலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக தொன் போஸ்கோ பள்ளி வரை சென்று நிறைவடைந்த பேரணியை சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தொடங்கி வைத்தார். பேரணியை தொடர்ந்து பேராசிரியர் ஜெயந்தி கருத்துரை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் சுய உதவிக் குழுக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடலாடி
கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் உம்முல்ஜாமியா வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் சிவனுபூவன் வரவேற்றார். பெண்கள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
கமுதி யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் சித்ராதேவிஅய்யனார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.