கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல் ;வாலிபர் கைது
ஜோலார்பேட்டையில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள வக்கணம்பட்டி காமராஜ் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது43), கூலி தொழிலாளி. சக்கர குப்பம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் காந்திராஜன் (27) என்பவருக்கு, ராஜ்குமார் ரூ.700 கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி ஜோலார்பேட்டை ஜங்ஷன் அருகில் ராஜ்குமார், காந்திராஜனிடம் தான் கொடுத்த 700 ரூபாயை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த காந்திராஜன், ராஜ்குமாரை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ராஜ்குமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து காந்திராஜனை நேற்று கைது செய்தனர்.