போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி

முதுகுளத்தூரில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2022-03-08 18:59 GMT
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
மினிமாரத்தான் போட்டி
முதுகுளத்தூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னக்கண்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் கலந்து கொண்டனர். 
இந்த போட்டியானது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் விதமாக இருவருக்கும் நட்புறவை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. மினி மாரத்தான் தொடர் ஓட்டப் போட்டியானது முதுகுளத்தூர் காந்தி சிலையில் இருந்து தொடங்கி வைத்தியனேந்தல் கிராமம் வரை 10 கி.மீ. தூரம் என ஆண்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.
பரிசு
மினி மாரத்தான் போட்டியில் பரமக்குடி, கமுதி, அபிராமம், சாயல்குடி, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்று முதல் 6 இடங்களைப் பிடித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிசு வழங்கினார். இதைத்தொடர்ந்து  உலக மகளிர் தின நாளை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்