வன்மீகநாதருக்கு 1,000 கலசங்களில் சகஸ்ரகலசாபிசேகம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் வன்மீகநாதருக்கு 1,000 கலசங்களில் சகஸ்ரகலசாபிசேகம் நடந்தது.
திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் வன்மீகநாதருக்கு 1,000 கலசங்களில் சகஸ்ரகலசாபிசேகம் நடந்தது.
பங்குனி உத்திர திருவிழா
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர் உற்சவம், சம்மந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நந்திகேஸ்வரர் ஆகியோருக்கு பக்தோற்சவம், கால பைரவர் உற்சவம், காட்சி கொடுத்த நாயனார் உற்சவம், சந்திரசேகரர் கேடய உற்சவம் என நாள்தோறும் உற்சவம் நடைபெற்றது.
1000 கலசங்கள்
இதன் தொடர்ச்சியாக நேற்று இறைவனை மகிழ்விக்க 1000 கலசங்களில் புனித நீர் நிரப்பி வேத வேள்வி செய்யப்பட்டது. பின்னர் புற்றிடங்கொண்ட புனிதரான வன்மீகநாதருக்கு வெண்ணெய் சாத்தி புனித நீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா செய்திருந்தார்.