சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

மயிலாடுதுறை அருகே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-03-08 18:48 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே நீடூர்- கங்கணம்புத்தூர் கிராமத்தில் ஜின்னா தெருவில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி புதிய மின் கம்பம் அமைக்கக்கோரி பல மாதங்களாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில்  புதிய மின் கம்பம் அமைக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் ரியாஜுதீன் மற்றும் பொதுமக்கள் நீடூர் துணை மின் நிலைய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்கள் மனு அளித்து 2 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்னர் கங்கணம்புத்தூர் ஜின்னா தெருவில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி  புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்