விராலிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
விராலிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விராலிமலை:
விராலிமலை அருகே உள்ள காக்காகுடியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.1,500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து குணசேகரன் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.