பஸ் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் சாவு
பஸ் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
காரியாபட்டி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் குரு பிரசாத் (வயது 29). இவர் திருச்சுழியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று குரு பிரசாத் வேலைக்கு செல்வதற்காக கமுதியில் இருந்து திருச்சுழி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.