செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகள் சேர்ப்பு
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலக அதிகாரி சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தபால் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பெண்களின் பாதுகாப்பிற்காக இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் திகழ்கிறது. இதில் அனைவரும் இணைந்து பயன் பெறுவீர் என்றார். இந்த நிகழ்ச்சியில் 15 பெண் குழந்தைகள் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இவ்விழாவில் துணை தபால் கோட்ட கண்காணிப்பாளர்(வடக்கு) பாலசுப்பிரமணியன், துணை தபால் கோட்ட கண்காணிப்பாளர் கந்தசாமி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.