மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம் ஆகியோர் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) நல்லழகு முன்னிலை வகித்தார். வட்டார வள மையத்தில் தொடங்கிய ஊர்வலம் அம்மன் கோவில் வீதி, நாட்டுக்கல், பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் வட்டார வள மையத்தை வந்தடைந்தது. இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அதிக அளவில் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இதில் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், மேற்பார்வையாளர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.