கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது
வேதாரண்யம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.;
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான கூரை வீட்டை நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கலைச்செல்வி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் கலைச்செல்வி பள்ளிக்கு வேலைக்சென்றிருந்த போது நேற்று மதியம் அவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலர் கந்தசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீவிபத்தில் அந்த வீட்டில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்த சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.