வாணியம்பாடி அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிக்க குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு சென்னை கோட்ட போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் வாணியம்பாடி பகுதியில் உள்ள பச்சைமிளகாய் வட்டம் கிராமத்தில் ஒரு மாட்டு கொட்டகையில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் உடனே அங்கு சோதனை நடத்தியபோது 200 மூட்டைகளில் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.