காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-08 17:32 GMT
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் மோரனஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 1,100 கிராம் கஞ்சா விற்றது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 40), சஞ்சிகொட்டாய் வேட்டராயன் (60) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்