கந்திகுப்பம் அருகே கார் மோதி வாலிபர் பலி
கந்திகுப்பம் அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
பர்கூர்:.9-
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் மிகவேல்ஜெகன் (வயது 24). இவர் கந்திக்குப்பம் அருகே தன் சித்தி வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, கந்திக்குப்பத்தில், சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிலை தோட்டம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மிகவேல்ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.