வேப்பனப்பள்ளி, ஓசூரில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வேப்பனப்பள்ளி, ஓசூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி, ஓசூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவிலில் கிருத்திகை மற்றும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஹோமங்கள், முருகன் வள்ளி தெய்வானை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
ஓசூர்
ஓசூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சஷ்டி மற்றும் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, முருகன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஓசூர் பெரியார் நகரில் உள்ள வேல்முருகன் கோவிலில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மலர் மற்றும் கனிகளால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மகாதீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், ஓசூர் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.