அடிலம் ஊராட்சியில் ரூ10¾ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
அடிலம் ஊராட்சியில் ரூ10¾ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அடிலம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.10.71 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தீபா அன்பழகன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராணி நாகராஜ், தர்மகர்த்தா சந்திரசேகர், இளைஞரணி அருள், தகவல் தொழில்நுட்பம் குணாசந்திரன், நிர்வாகிகள் தங்கவேல், மணி, பிரபாகரன், சின்னசாமி, வேணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.