அரூர் அருகே வீடு கட்டும் பணியின்போது கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

அரூர் அருகே வீடு கட்டும் பணியின் போது கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2022-03-08 17:28 GMT
அரூர்: 
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சின்னாங்குப்பம் பகுதியில் அரசு சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாண்டியன் பணியின் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்