தென்னையில் காண்டாமிருக வண்டு பொறி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தென்னையில் காண்டாமிருக வண்டு பொறி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மொரப்பூர்:
மொரப்பூர் ஒன்றியம், எம்.வேட்ரப்பட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் தென்னையில் காண்டாமிருக வண்டு பொறி பற்றிய செயல்விளக்கம் மற்றும் பெண் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் உதவி பேராசிரியர் ஏழுமலை மற்றும் இளங்கலை வேளாண்மை 4-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்கம் குறித்தும், அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.