பிளஸ் 2 மாணவர் தற்கொலை
பிளஸ் 2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அடுத்த அகரம் பேரூராட்சி உலகம்பட்டி வடக்கியூரை சேர்ந்தவர் தோமைராஜ். அவருடைய மனைவி ஜெசிந்தா மேரி. இவர்களது மகன் ராகுல்லண்ட் (வயது 17). இவர், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பல் சீரமைப்புக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இவர் ‘கிளிப்’ மாட்டியிருந்தார். இதனால் பல் வலிப்பதாக கூறிய ராகுல்லண்ட், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
தோமைராஜ், ஜெசிந்தா மேரி ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது பல் வலி அதிகமாக இருந்ததால் மனம் உடைந்த ராகுல்லண்ட் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் வீடு திரும்பிய ஜெசிந்தாமேரி, ராகுல்லண்ட் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராகுல்லண்டை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராகுல்லண்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜலால் முகமது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.