மகளிர் தின விழா கொண்டாட்டம்

மூங்கில்துறைப்பட்டில் மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2022-03-08 17:18 GMT

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கான பல்வேறு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி  உள்ளிட்டவைகள் நடைபெற்றது. 

தொடர்ந்து மகளிர் வளர்ச்சி குறித்தும், ஆசிரியர்களின் செயல்பாடுகள்  குறித்தும் மாணவிகள் பேசினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய லோச்சினோஸ், உதவி ஆசிரியர்கள் ஆனந்த விமல் ராஜ், பெஞ்சமின் ஜான்சன், லில்லி புஷ்பம், நூர்ஜஹான், பிரான்சிஸ் சேவியர், சேவியர் ஆரோக்கியதாஸ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் போலீஸ் நிலையம் சார்பில் மகளிர் தின விழா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் முனிவாழை கிராமத்தில் வயலில் வேலை செய்த பெண்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

 மேலும்,  கள்ளக்குறிச்சியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான போலீசார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்