சர்வதேச மகளிர் தின விழா

சின்னமனூர் அருகே மகளிர் தின வழா கொண்டாடப்பட்டது

Update: 2022-03-08 16:48 GMT
தேனி:
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் கோகோ-கோலா நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவுக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால், கோகோ-கோலா நிறுவனத்தின் அதிகாரி ஆதித்ய பாண்டா ஆகியோர் தலைமை தாங்கினர். சென்டெக்ட் நிர்வாக அறங்காவலர் செல்வலட்சுமி வரவேற்றார். 

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா, மதுரை நாடார் மகாஜன சங்க நாடார் சேர்மத்தாய் மகளிர் கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் ஜேசுராணி, நபார்டு வங்கி முன்னாள் உதவி பொதுமேலாளர் புவனேஸ்வரி, பச்சை வாழ்வு இயக்க நிறுவனர் வாழ்வரசி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். 

விழாவில், மகளிர் குழுவினர், கைவினைப் பொருட்கள் மற்றும் சாக்லேட் உற்பத்தி செய்யும் பெண்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யா சிவசெல்வி நன்றி கூறினார். விழாவில், பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தேனி அரசு சட்டக்கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

மேலும் செய்திகள்